லண்டனில் உயிரிழந்த கோவை மாணவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!

லண்டனில் உயிரிழந்த கோவையை சேர்ந்த மாணவர் ஜீவநாத் இல்லத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வந்த மாற்றுதிறனாளி ஒருவருக்கு மாதம் ரூ.3,000 அனுப்புவதாக அண்ணாமலை உறுதியளித்தார்.



கோவை: லண்டனில் உயிரிழந்த கோவை மாணவர் ஜீவநாத் குடும்பத்தினரை பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அடுத்த தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவநாத். ஜீவநாத் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் PG படிப்புக்காக சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஜீவநாத் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ஜீவநாத் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து சம்பவத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் ஜீவ்நாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவல் லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவர் ஜீவநாத் குளிக்க சென்ற போது விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என எந்த தகவலும் முறையாக வரவில்லை.

இதைத்தொடர்ந்து ஜீவநாத் உடல் கோவை கொண்டு வரப்பட்டு பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நரசிம்மநாயக்கன்பா பகுதியில் உள்ள கட்சி நிர்வாகியின் கல்யாண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.



அதனை தொடர்ந்து லண்டனில் இறந்த ஜீவநாத் சிவகுமார் வீட்டிற்கு நேரடியாக வந்து மலரஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

அப்பொழுது மாற்றுத்திறனாளி ஒருவர் தான் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் தோட்ட காவலாளியாக இருப்பதாகவும் இன்று உங்களை சந்திக்க வரும்போது என்னை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள் என்று கூறினார்.



இதனை தொடர்ந்து அந்த மாற்றுத்திறனாளியிடம் மாதம் 3000 ரூபாய் பாஜக கட்சி சார்பாக உங்களுக்கு நான் தருவதாக என்று உறுதிமொழி கொடுத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...