உடுமலை அருகேயுள்ள அரசுப்பள்ளியின் சுவரில் விரிசல் - இடிந்து விழும் அபாயம்!

உடுமலை அடுத்த சின்னக் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற அபாயம் உள்ளதால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: உடுமலை அடுத்த சின்னக் குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிசல் ஏற்பட்டுள்ள் சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னக் குமாரபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சின்ன குமாரபாளையம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. அப்போது சுற்றுச்சுவரின் அடித்தளம் வலுவற்றதாக அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விரிசல் விட்டு சேதமடைந்து உள்ளது. இதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தொடக்க பள்ளி என்பதால் சுட்டித்தனம் நிறைந்த குழந்தைகளே இங்கு அதிக அளவில் வருகை தருவார்கள். நுழைவுப் பகுதியில் கேட்டுடன் பொருத்தப்பட்ட சுற்றுசுவர் சேதம் அடைந்து உள்ளது குழந்தைகள் அறிய மாட்டார்கள்.

அந்த சுவர் கேட்டை திறக்கும் போது அசைந்து கொடுத்து மரத்துடன் சாய்ந்து நின்று கொள்கிறது. எப்பொழுது கீழே விழும் என்று தெரியாது விளையாட்டுத்தனம் நிறைந்த குழந்தைகள் கேட்டை பிடித்து விளையாடும் போதோ அல்லது வெளிப்புறத்தில் சுவருக்கு அருகில் செல்லும் போதோ விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. சிறு அலட்சியம் கூட பேராபத்தை ஏற்படுத்தி விடும் என்று அதிகாரிகளும் அறிவதில்லை.

எனவே சின்ன குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...