பல்லடம் அருகே கோழிக்கழிவில் விஷம் வைத்து 60 நாய்களை கொன்ற இறைச்சி கடை உரிமையாளர் கைது!

பல்லடம் அடுத்த கரைப்புதூர் பகுதியில் கோழிக்கழிவில் விஷம் கலந்து வீசி வீட்டு வளர்ப்பு நாய்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட நாய்கள் பலியான சம்பவத்தில் இறைச்சி கடை உரிமையாளர் பாலு என்பவரை பல்லடம் போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே 60 நாய்களை விஷம் வைத்து கொலை செய்த இறைச்சி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் வளர்த்து வந்த செல்லப் பிராணிகளான 60க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்தன.



இதனால் நாய்களை வளர்த்து வந்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நாய்கள் இறப்பிற்கான காரணம் குறித்து அப்பகுதியினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் குடியிருந்து கொண்டு கரைப்புதூர் லட்சுமி நகரில் இறைச்சி கடைகள் மற்றும் உணவகம் நடத்தி வரும் பாலு என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளை அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து காயப்படுத்தி வந்துள்ளன.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது கடை அருகே உள்ள கோழி இறைச்சி கடைக்குச் சென்று அங்கு வீணாகும் கோழி கழிவுகளை வாங்கி வந்து அதில் விஷம் கலந்து அவற்றை குப்பைகளில் வீசி சென்றதும், இதனை உட்கொண்ட வளர்ப்பு நாய்கள் அடுத்தடுத்து பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் நாய்களை விஷம் வைத்து கொன்ற வழக்கில் பாலுவை கைது செய்துள்ளனர்.

வளர்ப்பு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடைக்காரர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...