கோவையில் ஆட்சியர் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட முதன்மை பயிற்சியாளர்கள் கூட்டம்!

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைச் சட்டம் தொடர்பான முதன்மை பயிற்சியாளர்களான துணை வட்டாட்சியர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது,



இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாய விலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் ஒவ்வொரு பொது விநியோக நியாய விலை கடை பணியாளரும் தங்களது பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு தெரு வாரியாக நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தினை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்.

எழுத படிக்க தெரியாதவர்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க நியாயவிலை கடைகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த மையங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் குடும்ப அட்டை ஆதார் அட்டை இல்லாதவர்களாக இருந்து வறுமையில் உள்ளவர்களாக இருப்பவர்களுக்கு தனியாக ஒரு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேசமயம் வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு முதலில் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு வங்கிக் கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...