உடுமலையில் முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலையில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கான மறுவாழ்வு இல்லம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஆகிய உபகரணங்கள் Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.


திருப்பூர்: Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் உடுமலை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகரில் சிக்கந்தர் பாஷா வீதியில் செயல்பட்டு வரும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், Love and Acceptance என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் 2014 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான யூரின் டியூப், யூரோ பேக், டயபர், பெண்களுக்கான நாப்கின்கள் ஒரு வருடத்திற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இந்த வருடத்திற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதும் உள்ள முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சுமார் ஆயிரம் நபர்களுக்கு தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...