பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை!

கோவையில் நடைபெற்ற நம்ம ஊரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பள்ளிக்கூடமும் இருக்கும் என நம்புபவன் நான் என தெரிவித்தார்.



கோவை: பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.



இந்நிகழ்வில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பங்களிப்புகளை வழங்கினர்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,



பள்ளிகளில் கழிவறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளியின் கழிவறை எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் பள்ளிக்கூடமும் இருக்கும் என நம்புபவன் நான்.

இந்த திட்டம் ஆரம்பிக்கும் போது 12 நிறுவனங்கள் தான் இருந்தது. தற்பொழுது 132 நிறுவனங்கள் இணைந்துள்ளது. தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் வகுப்புகள் அரசு பள்ளிகளுக்கு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பள்ளிகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...