திருப்பூரில் தப்பிச்செல்ல முயன்ற தலைமறைவு குற்றவாளியை விரட்டிப்பிடித்த காவலர் - சிசிடிவி காட்சி வெளியீடு!

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன், திருப்பூர் ரயில் நிலையம் அருகே தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் ஒருவர் அவரை விரட்டி பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் விரட்டி பிடித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

திருப்பூரில் தலைமறைவு குற்றவாளி தப்பிச்செல்ல முயன்றபோது காவலர் விரட்டி பிடித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், கடந்த 2003ஆம் ஆண்டு அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் 2013 ஆம் ஆண்டு முதல் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் பாஸ்கரனை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் பாஸ்கரன் திருப்பூர் ரயில் நிலையம் அருகே இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால் அங்கு அவரை பிடிக்க சென்றபோது போலீசாரை பார்த்த பாஸ்கரன் தப்பிச் செல்ல முயற்சித்தபோது அனுப்பர்பாளையம் காவலர் காளியப்பன் துரத்திச்சென்று பாஸ்கரனை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.



இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...