உடுமலையில் டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது!

உடுமலை அடுத்த தளி சாலையில், டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய தேனி வீரபாண்டியை சேர்ந்த மாரிமுத்து (28) மற்றும் மடத்துக்குளம் அடுத்த பாப்பான் குளத்தைச் சேர்ந்த வீரமுத்து(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த தளி சாலையில் டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (44). இவர் மொடக்குபட்டி - தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக் கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் சேல்ஸ்மேன் சரவணன் என்பவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

வாகனம் தளி அருகே வந்தபோது, இவர்களது வாகனத்திற்கு பின்னால் வந்த கார், ஜெயப்பிரகாஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. அதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, அந்தக் காரில் முகக்கவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் மதுபானம் விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், பையை எடுத்துச் சென்று வீசிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் அளித்துள்ளார். அதைதொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற, தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மாரிமுத்து (28) மடத்துக்குளம் தாலுக்கா பாப்பான் குளத்தைச் சேர்ந்த வீரமுத்து(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து நான்கு சக்கர வாகனம் ஒன்றும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...