தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நினைவூட்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், நிறுத்தப்பட்ட சரண்டரை வழங்கிட வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களே நடத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

நிரந்தர பணியிடங்களை அழித்திடும் வகையில் உள்ள அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...