புலம்பெயர் தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கருத்து!

திருப்பூரில் நடைபெற்ற தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழாவிற்கு பின்னர் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நம் தாய் மொழியை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம் தான் தமிழ் மொழி கற்போம் திட்டம் என தெரிவித்தார்.



திருப்பூர்: புலம்பெயர் தொழிலாளர்களும் நமது சகோதரர்கள் தான் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தமிழ் மொழி கற்போம் திட்ட துவக்க விழா நடைபெற்றது.



இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டத்தினை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது,



தமிழ்நாடு முழுவதும் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருக்கின்ற நிலையில் அவர்கள் நம் சகோதரர்கள் போல என்பது வெறும் பேச்சளவில் மட்டுமல்ல.

அவர்களை அரவணைத்து நம் தாய் மொழியை அவர்களுக்கு வழங்குவதற்காக துவங்கப்பட்ட உன்னத திட்டம் தான் தமிழ் மொழி கற்போம் திட்டம். நம்மை தேடி நம்மை நாடி வருபவர்களுக்கு அவர்களது தாய் மொழியோடு நம் தாய் மொழியையும் கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 71.9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. அவர்கள் தாய்மொழி எதுவானாலும் அதனோடு தமிழ் மொழியும் கற்றுக் கொடுக்கப்படும். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி உள்ளது.

பல்வேறு மண்டல தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருப்பதன் மூலம் மக்கள் அரசு பள்ளிகளை நம்பி வருவதை உணர முடிகிறது. விரைவில் அனைவரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை தலைமைச் செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...