தடாகம் அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழப்பு - வனத்துறை விசாரணை!

தடாகம் அடுத்த நாத்துக்காடு பகுதியில் வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து பணியின் போது, 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்துள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் யானையின் இறப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: தடாகம் அடுத்த நாத்துக்காடு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் வடக்கு சுற்று பகுதியில் உள்ள தடாகம் காப்பு காட்டிற்கு உட்பட்ட நாத்துக்காடு என்ற பகுதியில் இன்று வனத்துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது தடாகம் காப்பு காட்டில் இருந்து சுமார் பத்து மீட்டர் தொலைவில் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக வனத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.



தொடர்ந்து, அங்கு வந்த வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில் இறந்து கிடந்தது சுமார் 20 வயதுள்ள பெண்யானை என்பது தெரியவந்தது. மேலும் யானை இறந்து சில தினங்கள் ஆகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...