கீரணத்தம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ செவிலியர் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 சவரன் கொள்ளை - பரபரப்பு!

கீணரத்தம் அருகே ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஏழிசை என்பவர், வெளியூருக்கு சென்ற நிலையில், அவரது, வீட்டின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கீணரத்தம் அருகே ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் செவிலியர் வீட்டின் ஜன்னலை உடைத்து 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கீரணத்தம் அடுத்த வி.ஐ.பி நகர் பகுதியை சேர்ந்தவர் அகிலன். இவரது மனைவி ஏழிசை வல்லபி (62), இவர் இந்திய இராணுவத்தில் செவிலியராக பணியாற்றி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது கணவர் அகிலன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்துள்ளார். ஏழிசை தனது மகன் சுந்தரவேலன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி ஏழிசை மேட்டுப்பாளையத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மகன் வேலை காரணமாக பொள்ளாச்சிக்கும், மருமகள் அவரது தாய் வீட்டிற்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பணி முடிந்து கடந்த 10 ஆம் தேதி மகன் சுந்தரவேலன் வீட்டிற்கு வந்த போது வீட்டின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஏழிசைக்கு தகவல் அளித்துள்ளார்.

உடனடியாக அங்கு வந்த ஏழிசை கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான 80 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடயவியல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...