நில உரிமை வழங்க வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்!

நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உடுமலை வனத்துறையை கண்டித்து ஊர்வலத்தில், ஈடுபட்டனர்.



இதில், 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி நில உரிமை வழங்க வேண்டும். நிலப்பகுதியில் இருந்து செல்லும் பாதைகளை கான்கிரீட் பாதைகளாக மாற்றம் செய்ய வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் திடீரென வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது உடுமலை வனத்துறையை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

மேலும் வனப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாலை அமைக்க அனுமதி அளித்தும், உடுமலை வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



மலைவாழ் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உடுமலை வனத்துறை அலுவலகத்தை முன்னிட்டு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...