தவறவிட்ட பணத்தை உடனடியாக உரியவரிடம் ஒப்படைத்த இளம்பெண் - பல்லடம் போலீசார் பாராட்டு!

பல்லடம் அடுத்த என்.ஜீ.ஆர் சாலையில் தபால் நிலைய ஊழியர் குணசேகரன் என்பவர் தவறவிட்ட ரூ. 1.1 லட்சம் பணத்தை கண்டெடுத்து, அதனை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த த பிரியா என்ற இளம்பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே தபால் நிலைய ஊழியர் தவறவிட்ட ரூ.1.1 லட்சம் பணத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைத்த இளம்பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலையத்தில், இளவந்தி பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர், வழக்கம் போல் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது தான் சேமித்து வைத்த 1 லட்சத்து பத்தாயிரம் ரூபாயை பணத்தை துணி பையில் எடுத்து வைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது என்ஜீஆர் சாலையில் செல்லும் போது வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கும் போது வாகனத்தில் வைத்திருந்த துணி பை சாலையில் விழுந்துள்ளது.



இந்நிலையில் என்ஜீஆர் சாலை வழியாக வந்து கொண்டிருந்த சின்னிய கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா என்ற இளம்பெண், கீழே கிடந்த துணி பையை எடுத்து பார்க்கும் போது 1 லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஆதார் போன்ற அடையாளம் அட்டை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



இதனையடுத்து பிரியா உடனடியாக இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மேலும் அடையாள அட்டையில் உள்ள மொபைல் நம்பருக்கு துணி பையை தவற விட்டது குறித்து தகவல் அளித்தார்.

இந்நிலையில் அங்கு வந்த போலீசார் பிரியாவிடம் உள்ள பணத்தை பெற்று குணசேகரனிடம் ஒப்படைத்தனர். பல்லடம் பிரதான சாலையில் தபால் நிலைய ஊழியர் தவற விட்ட பணத்தை இளம்பெண் கண்டெடுத்து போலீசார் மூலமாக ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...