தாராபுரம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு டவுசர் கொள்ளையன் கைது!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 டவுசர் கொள்ளையர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 3வது கொள்ளையனான தேனியை சேர்ந்த ரமேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த மேலும் ஒரு டவுசர் கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் பகுதியில் டவுசர் கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வந்தனர்.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில், துணை ஆய்வாளர் கருப்புசாமி, காவலர்கள் கலைச்செல்வன், வேலுமணி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் தாராபுரம் பகுதியில் திருடிய டவுசர் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், தேனி மாவட்டம் ஜங்கிள்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற மூசா (52), தேனி காமாட்சிபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அர்ஜுனன் (28) ஆகியோரை கைது செய்தனர்.



இந்த வழக்கில் தொடர்புடைய தேனி மாவட்டம் குப்பிய நாயக்கன்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த டவுசர் கொள்ளையன் ரமேஷ் (45) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் நகைகள் மீட்கப்பட்டன.

இவர் மீது மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஒரு கொலை மற்றும் திருட்டு வழக்கும், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...