கலைஞர் மகளிர் உரிமை திட்ட தன்னார்வலர்கள் பயிற்சி முகாம் - திருப்பூர் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூரில் மகளிர் உரிமை திட்டத்திற்கான தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயனாளிகளை தேர்வு செய்வதற்கான சிறப்பு பயிற்சி முகாமில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் கிறிஸ்துராஜ் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமில், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பிற தன்னார்வலர்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.



அவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 235 நியாய விலைக் கடைகளின் அருகில் நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த சிறப்பு முகாமில் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...