சூலூர் அருகே பைக் சறுக்கி விபத்து - பெண் சித்த மருத்துவர் மற்றும் காவலர் உயிரிழந்த சோகம்!

சூலூர் அடுத்த நீலம்பூர் சாலையில் தேனியை சேர்ந்த கண்மணி பிரியா (33) என்ற சித்த மருத்துவர் மற்றும் காவலர் ராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சறுக்கி விழுந்த நிலையில் பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சூலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் சித்த மருத்துவர் மற்றும் காவலர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



சூலூர் அருகே நீலம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த போச்சம்பள்ளியைச் சேர்ந்த காவலர் மற்றும் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் உள்ளிட்ட இருவர் சாலையில் சறுக்கி விழுந்ததில் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த அரசு சித்த மருத்துவரான கண்மணி பிரியா (33) தேனியில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலம்பூர் அருகேயுள்ள ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் உறவினரான பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் கண்மணி பிரியா வர்மக்கலை பற்றி பயிற்சிக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்காக பேச்சியம்மாளின் கணவர் காந்திபுரம் வரை கொண்டு சென்று விட்டு வந்துள்ளார். இதனை அடுத்து மாலை சுமார் 5:30 மணி அளவில் பேச்சியம்மாளுக்கு போன் செய்து பயிற்சியை முடித்துக்கொண்டு தான் வந்து கொண்டிருப்பதாக சித்த மருத்துவர் கண்மணி பிரியா தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், போச்சம்பள்ளியை சேர்ந்த காவலரான ராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் நீலம்பூர் அவினாசி சாலையில் பேச்சியம்மாள் வீட்டை நோக்கி இருவரும் சென்றுள்ளனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சறுக்கியதில் இருவரும் கீழே விழுந்தனர்.



அப்போது பின்னால் வந்த லாரியில் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது ஏறியது. இதில் சக்கரத்தில் சிக்கிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் போலீசார் உடனடியாக கண்மணி பிரியா மற்றும் ராஜா ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்திலிருந்து கோவையில் பயிற்சிக்காக வந்த சித்த மருத்துவர் மற்றும் அவரது உடன் வந்த காவலர் உடல் நசுங்கி உயிரிழந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...