பெண் போலீசாரை கன்னத்தில் அறைந்ததாக மதுரையைச் சேர்ந்த 2 பெண்கள் சூலூரில் கைது!

மதுரையை சேர்ந்த நந்தினி, நிரஞ்சனா என்ற சகோதரிகள், உதகையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பங்கேற்ற மோகன் பகவத்துக்கு எதிராக போராட சென்ற போது, இருவரையும் தடுக்க முயன்ற பெண் போலீசாரை தாக்கியதாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பெண் போலீசாரை தாக்கியதாக மதுரையை சேர்ந்த பெண்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய கூட்டம் நடைபெற்றது. அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். இந்தக் கூட்டம் தமிழ்நாட்டில் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை சூலூர் போலீசாருக்கு பெண்கள் இருவரும் அரசு பேருந்தில் கோவையை நோக்கி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சூலூர் காவல் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்தில் பெண்கள் இருவரும் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வர முயன்றனர். அப்போது பெண்கள் இருவரும் பெண் போலீசாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் ஆனந்தி என்ற பெண் காவலருக்கு கன்னத்தில் மூன்று அறைகள் விழுந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து அவர்கள் இருவரையும் பிடித்து சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது போலீசாரை தகாத வார்த்தையில் பேசி திட்டி உள்ளனர்.

இது சம்பந்தமாக போலீசார் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகிய இருவரையும் கைது செய்து சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...