கோவை கற்பகம் பல்கலையில் ‘பூம்பொழில்-2023’ வாழ்வியல் மதிப்புக்கூட்டு உரையரங்கம்!

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலையில் ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான ‘பூம்பொழில்-2023’ வாழ்வியல் மதிப்புக்கூட்டு பயிலரங்க சிறப்புரை நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.


கோவை: கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 12ஆம் தேதி ‘பூம்பொழில்-2023’ வாழ்வியல் மதிப்புக்கூட்டு பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறை - தமிழ் பிரிவின் சார்பில் இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ‘சிந்தனைச் சிறகுகள்’ - வாழ்வியல் மதிப்புக்கூட்டுப் பயிலரங்கத்தின் நான்காம் நாள் சிறப்புரை கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடைபெற்றது.



நகைச்சுவைப் பட்டிமன்றப் பேச்சாளர் கு.ரா.மஞ்சுநாதன், ‘மகிழ்ச்சி என்னும் மந்திரச்சாவி’ என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். சிரிப்புணர்வும், சிந்தனைத்திறனும் மனித இனத்துக்கு இயற்கை அளித்த பெரும் கொடைகளாகும்.

சிந்திக்கத் தெரிந்த பண்புள்ள மனிதர்கள் மட்டுமே பலருக்கும் பயனுள்ளவகையில் வாழ்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியும், நகைச்சுவை உணர்வும் ஒட்டுமொத்த சுற்றுப்புறத்தின் மகிழ்ச்சிக்குக் காரணமாகின்றன. எனவே, அனைவரது உள்ளத்தையும் கொள்ளைகொண்டு, காலம் கடந்தும் அனைவரது நினைவிலும் என்றும் நாம் நிலைத்து வாழ்வதற்கு தன்னலத்தை மறந்த மகிழ்ச்சியே மந்திரச் சாவி என்று கூறினார்.

இதனையடுத்து ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற பூம்பொழில் உரையரங்கின் நிறைவுநாளில், கோவை பட்டிமன்ற பேச்சாளர் அமுதகானம் அய்யாசாமி மற்றும் நாட்டுப்புற பாடகர் சமர்பா குமரன் ஆகியோர் இணைந்து, ‘மெல்லிசையும் மண்ணிசையும்’ என்கிற பொருண்மையில் சிறப்புரையாற்றினர்.

மனித வாழ்க்கையும், இசையும் இணை பிரியாத தொடர்புடையவை. மண்ணிசையாகிய நாட்டுப்புற பாடல்கள் மக்களின் பண்பாட்டு பதிவுகளாக விளங்குகின்றன. அவற்றின் வழியாக நமது மண்ணின் பண்பாட்டுத்தடங்களை இளைஞர்கள் தேடிக் கண்டடைவதும் பழங்கால வரலாற்றைச் சான்றுகளுடன் மீட்டெடுக்கிற ஆய்வு முயற்சியாகும்.

கவிஞர் கண்ணதாசனார், பட்டுக்கோட்டையார் முதலாக கவிஞர் வைரமுத்து போன்ற பல கவிஞர்களின் திரையிசைக் கவிதைகளும் காலத்தால் அழியாத காவியங்களாக விளங்குகின்றன என்பதை எடுத்துரைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...