திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்!

திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். வர்த்தகர்கள் - பொறியாளர்கள் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் சிவில் இன்ஜினியர் அசோசியேசன் சார்பிலான 18வது கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.



திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பாக ஆண்டுதோறும் திருப்பூரில் கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.



ஆண்டுதோறும் கட்டிடங்களுக்கு தேவையான புதுவகை தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த கட்டிட கட்டுமான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த ஆண்டுக்கான கட்டிட கட்டுமான பொருட்களின் கண்காட்சி தொடங்கியது.



இதனை மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் செங்கற்களுக்கு மாற்றாக வரப்பட்டுள்ள கற்கள், கட்டிடத்தை இடிக்காமல் நகர்த்தும் மற்றும் உயர்த்தும் தொழில்நுட்பம், புதுவகை பர்னிச்சர்ஸ், புதிய வகை எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் முதல் நாள் நிகழ்வில் வர்த்தகர்களுக்கும் பொறியாளர்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தக்கூடிய வகையிலான புதிய கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...