மூலனூர் ஒன்றியத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் கயல்விழி!

தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டிலான மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, CNF நிதி, மூலனூர் பேரூராட்சி நெடுஞ்சாலை துறை, 15வது நிதிக்குழு மூலம் ரூ.4 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள பல்வேறு திட்டப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்த திட்டத்தின் மூலம், மூலனூர் ஊராட்சி ஒன்றியம் கிளாங்குண்டல், ராக்கியா வலசு, குமாரபாளையம், வடுகபட்டி, மஞ்சக்காம்பட்டி, சடையப்பன் புதூர், நீளாங்காளி வலசு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



இந்த பகுதிகளில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலை அமைத்தல், மேம்பாலம் அமைத்தல், குடிநீர் மேல்நிலை தொட்டி அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிகழ்விற்கு பின்னர், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அரசு ஆரம்பப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட சமையல் கூடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, ஆதிதிராவிடர் காலனியில், சுகாதார வளாகம் திறந்து வைத்தல், சிமெண்ட் சாலை திறந்து வைத்தல், உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட மக்கள் நல திட்ட கட்டிடங்கள் மற்றும் தார் சாலை, சிமெண்ட் சாலைகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, துரை தமிழரசு, மூலனூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி கார்த்திக், மூலனூர் பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தண்டபாணி, கன்னிவாடி பேரூராட்சி சுரேஷ் வருவாய் அலுவலர் செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...