கோவை செம்மேடு அருகே மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் மனு!

கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள செம்மேடு பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் குழந்தைகள் எண்ணிக்கை குறைவு காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதால், அங்கன்வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் செம்மேடு அருகே மூடப்பட்ட அன்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் NGR வீதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மூடப்பட்டு செயல்படாமல் உள்ளது.

இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில் தற்போது குழந்தைகள் எண்ணிக்கை குறைவு எனக் கூறி அங்கன்வாடி மையத்தை மூடியதாக தெரிகிறது. இதன் காரணமாக செம்மேடு கிராமத்தில் காந்தி காலனி, NGR வீதியில் உள்ள குழந்தைகள் இந்த வருடம் அங்கன்வாடி மையத்தில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் இப்பகுதியில் உள்ள தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை மறுபடியும் திறக்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி அங்கன்வாடி மையத்தை விரைவில் திறந்து குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் பயனடைய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...