பட்டீஸ்வரர் ஆலய குத்தகை விவசாயிகள் மீது நில அபகரிப்பு வழக்கு - ஆகஸ்ட் 15ல் உண்ணாவிரத போராட்டம்!

கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் ஆலய குத்தகை விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர் என வழக்கு பதிவு செய்து நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 15-ல் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.



கோவை: பட்டீஸ்வரர் ஆலய குத்தகை விவசாயிகள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலய குத்தகை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் பேரூரில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க (சாதி மதம் கட்சி சார் பெற்றது) தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் குத்தகை விவசாயிகள் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது,

தமிழ்நாடு அரசு தக்காளி விலை உயர்வு குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தேங்காய், பஞ்சு விலை வீழ்ச்சி குறித்து நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆறுகளிலும் பாசன கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதால் மாசு ஏற்பட்டு வருவதை தடுத்து நிறுத்த நீர்ப்பாசனத் துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலை வள பாதுகாப்பை தீவிரப் படுத்துவதோடு, வனவிலங்குகள் வசிப்பிடமான மலைகளில் வானளாவிய கட்டடங்கள் கட்டப்படுவதாலும், மலைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு கனிம வள கடத்தல் சட்ட விரோதமாக நடைபெறுவதாலும் விளைநிலங்களை நோக்கி வனவிலங்குகள் படை எடுக்கிறது. இதனால் விளைநிலங்கள் அழிக்கப்படுகிறது.

இந்நிலையில் காட்டுப்பன்றியால் பயிர்கள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது போல விவசாயிகள் சுட்டு கொல்லுவதற்கு துப்பாக்கி அனுமதி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுவதை கைவிட வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் இன்றைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000, கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாயும் வழங்க முன்வர வேண்டும்.

வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதிபடுத்திட வேண்டும்.

தமிழ்நாடு முழுமையிலும் நீதிமன்ற நடவடிக்கையை காரணம் காட்டி 100 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகைப்பதிவை ரத்து செய்து விளை நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

குத்தகை விவசாயிகள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து நிலங்களை கைப்பற்ற முனைவதை ஏற்க மாட்டோம். விவசாயிகளின் விளைநிலங்களில் உணவு உற்பத்தியை கணக்கில் கொண்டு குத்தகை பதிவை இன்றைய நிலைக்கு நில வகைபாடு செய்து உரிய விவசாயிகளுக்கு சாகுபடி உரிமையை குத்தகை பதிவு செய்து வழங்கிட கொள்கை முடிவு எடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

இதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளிலி ருந்து தடுத்து வஞ்சிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு சட்டவிரோதமாக அணையை கட்டி முடிப்பது வரையிலும் தமிழக அரசு மூடி மறைத்தது ஏன்? என்பதை தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். அணை கட்டுமானத்தை உடனடியாக தகர்த்தெறிய முன்வர வேண்டும்.

பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 360 ஏக்கர் நிலம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். நீதிமன்ற நடவடிக்கையை கரணம் காட்டி விவசாயிகளை ஆக்கிரமிப்பாளர்கள், அபகரிப்பாளர்கள் என விளம்பரப்படுத்துவதை, விவசாயிகளை அவமானப்படுத்துவதை கைவிட வேண்டும்.

அவர்களுக்கு உரிய குத்தகை பதிவை வழங்கி கொள்கை முடிவு எடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவித்து விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பேரூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை எல்.பழனியப்பன், துணை தலைவர் எம்.செந்தில் குமார், உயரமட்டக் குழு உறுப்பினர் பா.அசோகன், பேரூர் பட்டீஸ்வரர் ஆலய குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...