கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் - மீண்டும் இயக்கக்கோரி திருப்பூரில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கொரோனா காலக்கட்டத்தில் திருப்பூர் வழியாக செல்லும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவற்றை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னலாடை தொழில் நிறைந்த திரப்பூரில் தினந்தோறும் பணி நிமித்தமாகவும், திருப்பூரிலிருந்து ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களுக்கும் ஏராளமான பயணிகள் ரயில் மூலம் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் முழுவதுமாக இயக்கப்படாமல் இருப்பதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.



இந்நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் திருப்பூர் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...