திருப்பூரில் பைக் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலியான சோகம்!

திருப்பூர் அடுத்த குமரன் சாலை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி தேவானந்த் (20) என்ற கல்லூரி மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக லாரி ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் குமரன் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அடுத்த மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் உடற்பயிற்சி செய்வதற்காக, பார்க் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திர்க்கு சென்றுள்ளார். குமரன் ரோடு பார்க் சாலை அருகே வந்த போது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து வந்த லாரியானது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது. வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை வாகன ஓட்டிகள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...