உடுமலையில் பாஜக நிர்வாகிகள் இருவரிடையே மோதல் - ஒருவருக்கு மண்டை உடைந்தது!

உடுமலை அடுத்த கோமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான அருண் பிரசாத்தை ஒரு கும்பல் தாக்கி மண்டையை உடைத்த நிலையில், இதற்கு உடுமலை ஊராட்சி ஒன்றிய பாஜக கவுன்சிலர் நாகமாணிக்கம் தான் காரணம் எனக்கூறி அவரது வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: உடுமலை அருகே பாஜக நிர்வாகிகள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு மண்டை உடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே பொள்ளாச்சி வட்டத்துக்கு உட்பட்ட கோமங்கலம் புதூர் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரசாத்.



இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஐடி விங்கில் பொறுப்பில் இருப்பதாக கூறி கேரளா செல்லும் மணல் லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளார்.

தமிழகத்தின் கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக புகார் அளித்துள்ளார். ஆனால் முறையான ஆவணங்களுடன் தான் வாகனங்கள் செல்கிறது என அதிகாரிகள் தரப்பு கூறி வருகின்றனர். மேலும் பாஜக நிர்வாகிகளே சிலர் பணம் பெற்றுக் கொண்டு கேரளா செல்லும் லாரிகளை தடுப்பதில்லை என அருண் பிரசாத் புகார் அளித்துள்ளார்.

பல பாஜக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.



இது குறித்த மோதலால் உடுமலை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், உடுமலை வடக்கு மண்டல தலைவராகவும் உள்ள நாகமாணிக்கம் மற்றும் அருண் பிரசாத்துக்கு பலமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.

தகாத வார்த்தைகளால் இருவரும் செல்போனில் பேசி சண்டை போட்டுள்ளனர் இந்நிலையில் ஒரு கும்பல் உடுமலையில் அருண் பிரசாத்தை தாக்கி மண்டையை உடைத்தது. இதற்கு நாகமாணிக்கம் தரப்பினர் தான் காரணம் எனக்கூறி நாகமாணிக்கம் வீட்டுக்கு சென்ற அருண்பிரசாத் கற்களை வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துள்ளார்.



இதனை தொடர்ந்து உடுமலை காவல் நிலையத்துக்கு வந்த நாகமாணிக்கம் ஆதரவாளர்கள் அருணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் அருண் பிரசாத் உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களது மோதலை விசாரித்த உடுமலை காவல்துறையினர் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அந்தந்த பாஜக நிர்வாகிகள் எவ்வளவு கமிஷன் வாங்கினார்கள் என்பது குறித்த ஆடியோவும், தகாத வார்த்தைகளில் பேசிய அருண் பிரசாத் நாகமாணிக்கம் பேசிய ஆடியோவும் சமூக வளைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருவதால் உடுமலை பாஜக நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...