தமிழ்நாடு தின விழா - தமிழ் மொழியை காக்க வலியுறுத்தி பூலாங்கிணறு அரசுப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம்!

தமிழ்நாடு தின விழாவை முன்னிட்டு உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை காக்க வலியுறுத்தி வாழ்க தமிழ், வாழ்க தமிழ்நாடு முழக்கங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.


திருப்பூர்: தமிழ்நாடு தின விழாவை முன்னிட்டு உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தமிழ் மொழியை காக்க வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் நா.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழிற்கல்வி ஆசிரியர் கே.செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

நாட்டின் நலப்பணி சட்ட அலுவலர் செ.சரவணன் வரவேற்புரை ஆற்றினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் என்.சந்திரன் தமிழ்நாடு தோன்றிய வரலாறு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழ் மொழியை பாதுகாக்க ஒவ்வொருவரும் தாய் மொழியை பேச வேண்டும். பிற மொழிகள் கலந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். தமிழ் மொழி வளர தமிழில் புதிய புதிய சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றை கண்டறிந்து பேச வேண்டும்.

பழைய சொற்களையும் தமிழ் உணர்வோடு பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழியை நாம் பயன்படுத்தினால் தான், நம் தாய்மொழி வளரும் தாய் மொழி பற்று அனைவருக்கும் தேவை.

தமிழ்நாடு என்ற பெயர் அமைய காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்த செய்திகளையும் எடுத்துக் கூறினார்.



இதனையடுத்து, மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலமானது, பூலாங்கிணறு, கென்னடி நகர், முத்து நகர், அண்ணா நகர் முதலான பகுதிகளில் தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க, தமிழ் போற்றுவோம் என்று கோஷங்களை இட்டவாறு பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...