தாராபுரம் அருகே குப்பையில் கிடந்த காலாவதி மருந்துகள் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: தாராபுரம் அருகே காலாவதியான மாத்திரைகள் மற்றும் மருந்துகள், சாலையோரம் கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் - கொங்கூர் சாலையில், காலை வயலுக்கு சென்ற மக்கள், சாலையோரம் குப்பையோடு குப்பையாக, நூற்றுக்கணக்கான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



குப்பையில் கிடந்த மாத்திரைகளில், இது தமிழ்நாடு அரசு வழங்குவது, விற்பனைக்கு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.



மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிய மாத்திரைகள் மற்றும் மருந்து பொருட்களை மக்களுக்கு தராமல் வைத்திருந்து, காலாவதியான பின் குப்பையில் கொட்டப்பட்டதா, தேவைக்கு போக மீதம் இருந்த மருந்து பொருட்கள் என்றால் உரிய இடத்தில் ஒப்படைக்காதது என் எனவும், இதை செய்தவர்கள் யார் எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மக்களை சென்றடைய வேண்டிய மருந்து பொருட்கள், குப்பையில் கிடப்பதற்கு யார் பொறுப்பு என்பதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வர்லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...