கோவை கோட்டைமேடு நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு!

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.



கோவை: கோட்டைமேடு நல்லாயன் துவக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள நல்லாயன் துவக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, மாணவ தலைவராக சஜ்ஜாத் முஜாஹித் 184 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். துணைத் தலைவராக ஹிஸாம் அஸ்லம் 182 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி உணவு தலைவராக ஜெரோம் ரையான் 133 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

பள்ளி விளையாட்டு தலைவராக இம்ரான் 173 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார். பள்ளி சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் 119 அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசிரியர் விமல் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.



மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இதனிடையே வெற்றி பெற்ற மாணவர்களை சக மாணவர்கள் தூக்கி கொண்டாடினர்.

இதனை அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற மாணவர்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...