மன அழுத்த நோய் - செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அடுத்த பூங்கா சாலை அருகேயுள்ள வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இளம்பெண் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உறவினருக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே இளம்பெண் ஒருவர் செல்போனில் மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த பூங்கா சாலை அருகேயுள்ள வி.எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகள் ஸ்வேதா (21). கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்த ஸ்வேதா நேற்று காலை நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஸ்வேதா தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.



இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாராபுரம் போலீஸார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், தீவிர மன அழுத்த நோயால் (ஓ.சி.டி) பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா கடந்த சில ஆண்டுகளாக அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் மன அழுத்தத்துக்கான மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ஸ்வேதா வீடு திரும்பியுள்ளார். இதுபோன்று அடிக்கடி ஸ்வோதா தற்கொலைக்கு முயன்றுள்ளாராம். கடந்த சில நாள்களாக தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்வேதா காலையில் தாமதமாகத்தான் எழுவாராம்.

நேற்று காலை 9 மணியாகியும் கதவைத் திறக்காததால், வழக்கம் போல் தாமதமாக எழுவார் என ஸ்வேதாவின் தாய் ராஜாமணி இருந்துள்ளார்.

இந்த நிலையில், காலை, ராஜாமணியை செல்போனில் அழைத்த அவரது சகோதரர் மகள் நித்யா, மன அழுத்த பிரச்னையால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஸ்வேதா தனக்கு திங்கள்கிழமை இரவு மெசேஜ் அனுப்பியுள்ளாதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த ஸ்வேதாவின் தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்வேதா அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மன அழுத்த பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...