தாராபுரம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுவன் பலியான சோகம்!

தாராபுரம் அடுத்த பொம்பநல்லூரில் தங்கியுள்ள ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தமாஜி என்பவரது 3 வயது மகன், பக்கத்து வீட்டு செப்டிக் டேங்க் மீது விளையாடிக் கொண்டிருந்த போது அதன் மூடி உடைந்து உள்ளே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே, விளையாடும் போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது வடமாநில சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தமாஜி (36). இவர், தனது குடும்பத்துடன், தாராபுரம் - பழனி சாலையில், பொம்பநல்லூர் பகுதியில் உள்ள (பழனி விஜய்) தனியார் ஸ்பின்னிங் மில்லில் குடியிருப்பில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.

சந்தமாஜியின் 3 வயது மகன், பக்கத்து வீட்டு சிறுவனுடன் குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த கழிவுநீர் தொட்டியின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து, இருவரும் தொட்டிக்குள் விழுந்தனர். அங்கிருந்த தொழிலாளர்கள், இருவரையும் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.



அங்கு, சிறுவர்களை பரிசோதனை மருத்துவர்கள், 3 வயது வடமாநில சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மற்றொரு சிறுவனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இச்சம்பவம் குறித்து, அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...