சூலூரில் கஞ்சா விற்பனை - வடமாநில தொழிலாளி கைது!

சூலூர் அடுத்த காங்கேயம்பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்த சிவ்குமார் சகானி என்பவரை கைது செய்து, சூலூர் போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: சூலூர் அடுத்த காங்கேயம் பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக வடமாநில தொழிலாளி ஒருவரை சூலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பீகார் மாநிலம் முசாபர் பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சகானி என்பவரது மகன் சிவ்குமார் சகானி (35). இவர் தற்போது காங்கேயம் பாளையம் மெத்தை வீடு வீதியில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஏழு வருடங்களாக காங்கேயம் பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் காங்கேயம் பாளையத்தில் சிவ்குமார் சஹானி கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கிடைத்தது. இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் காங்கேயம் பாளையத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சிவ்குமார் சகானி காங்கேயம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது கையும் களவுமாக பிடிபட்டார்.



அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை மறைவிடத்திலிருந்து பறிமுதல் செய்தனர்.



இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமார் சகானியை கைது செய்தனர். மேலும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...