கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் ஆட்சியரிடம் மனு!

கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கத்தினர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை நேரில் சந்தித்து கைத்தறி நெசவாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கைத்தறி ரகங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தினை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். நெசவு உற்பத்தி கொள்முதல் இல்லாத காலங்களில் நெசவாளர்கள் குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு 5,000 ரூபாய்க்கு கைத்தறி உற்பத்தி துணிகளை வாங்குவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும், நெசவாளர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நெசவாளர் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டும்.

நெசவாளர்களுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி பொருட்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதற்கும் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

கைத்தறி நெசவாளர்களின் பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு நலன் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டையை மீண்டும் இலவசமாக வழங்க வேண்டும்.

இவ்வாறான கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்த மனு அந்த இயக்கத்தின் மாநில கௌரவ தலைவர் பசுபதி தலைமையில் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...