சூலூர் அருகே மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்த தாய், மகன் கைது!

சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாரசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்ட போது, அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் சீல் உடைக்கப்பட்ட நிலையில் 50க்கும் மேற்பட்ட பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.



அதை தொடர்ந்து கள்ள சந்தையில் மது விற்பனை செய்ததாக அப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பூவாத்தாள் மற்றும் அவரது மகன் குமாசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்களிடமிருந்து 58 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...