உடுமலை அருகேயுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

உடுமலை அடுத்த நரசிங்காபுரத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், சுமார் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை மட்டைகள் மற்றும் டிராக்டர்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் மைவாடி ஊராட்சி நரசிங்காபுரத்தில், கன்னிமுத்து என்பருக்கு சொந்தமான, சுஷ்மா தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.



இந்த தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.



தென்னை மட்டைகளில் ஏற்பட்ட தீ காற்றின் வேகத்தால் மளமளவென பரவி, தென்னை நார் தொழிற்சாலை முழுவதுமாக தீயில் எரிந்து சேதமானது.



இதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை மட்டைகள் மற்றும் டிராக்டர்கள் தீயில் எரிந்து சேதமாகின.



தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



முன்னதாக அருகிலுள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தீ தென்னை நார் தொழிற்சாலைக்கும் பரவியதாக கூறப்படுகிறது.



காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...