உடுமலை மலை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாததால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

உடுமலை அடுத்த அமராவதி வனச்சரக பகுதியில் உள்ள மலை கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாதால், நேற்று முன் தினம் ஒருவர் உயிரிழந்த நிலையில், மலைகிராமங்களில் நிரந்தர மருத்துவ வசதி வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.



திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள், நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உடுமலை - அமராவதி வனச்சரக பகுதியில் குருமலை, குழிப்பட்டி, மாவடைப்பு, தளிஞ்சி உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இங்கு ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மலைவாழ் கிராமங்களுக்கு வனத்துறை சார்பில் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும் மருத்துவ வசதி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

இந்த கிராமங்களில் அவ்வப்போது சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றாலும் அவசர தேவைக்கு சமவெளிப் பகுதிக்கு செல்லும் நிலை தான் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் குருமலை கிராமத்தில் பழனிச்சாமி என்பவருக்கு உடல்நிலை கடுமையாக பாதிப்பு ஏற்பட்டது.



அரசு மருத்துவமனைக்கு செல்ல பாதை இல்லாத காரணத்தால் தொட்டிலில் வைத்து ஒரு கம்பத்தில் கட்டி தூக்கி தூக்கிச் சென்றனர்.



குருமலை பகுதியில் இருந்து குழிப்பட்டி வரை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை பாறைகளில் நடந்து வந்து அங்கிருந்து 9 கிலோமீட்டர் சாலை வழித்தடத்தில் நடந்து பொன்னால் அம்மன் சோலைக்கு தூக்கிச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்சை வரவழைத்து உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் காலதாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்த நிலையில்.



தற்போது பழனிச்சாமி உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

எனவே அமராவதி வனச்சரக மலைவாழ் கிராமங்களான குருமலை, குழிப்பட்டி, மாவடைப்பு, முள்ளு பெட்டி, தளிஞ்சி, ஈசல் திட்டு உட்பட மலைவாழ் கிராமங்களில் நிரந்தர மருத்துவ வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற மலைவாழ் மக்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என்பது மலைவாழ் மக்களின் தற்போது வரை கனவாக உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...