பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் 4000 கி.மீ. பிரச்சார பயணம்!

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே துவங்கப்பட்டது.


கோவை: ஒன்றிய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் 4000 கிலோமீட்டர் பிரச்சார பயணம் துவங்கப்பட்டுள்ளது.



அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மையமாக்கும் நடவடிக்கை, கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கும் நடவடிக்கை, கிராம வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கும் நடவடிக்கை போன்றவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



மேலும், மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உறுதி செய்ய வேண்டும். மக்கள் சேமிப்பை மக்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்தப் பிரச்சார பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...