கோவையில் உள்ள தங்கக்கட்டி விற்பனையகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

கோவை தர்மராஜா கோவில் வீதியில் செயல்பட்டு வரும் 2 தங்கக்கட்டி விற்பனை நிலையங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஆவணங்கள் சரியாக இருந்ததன் காரணமாக சோதனையை முடித்துக் கொண்டு திரும்பி சென்றதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் தர்மராஜா கோவில் வீதியில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் மொத்தம் 50 தங்க கட்டி விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தங்கக் கட்டிகள் வியாபாரம் செய்யும் இருவரது அலுவலகங்களில் மத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது, மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது. சட்டத்துக்கு புறம்பான தகவல்களோ பொருட்களோ இல்லை என்ற காரணத்தால் அதிகாரிகள் ஆய்வை நிறைவு செய்து புறப்பட்டு சென்றதாக தங்கக்கட்டி வியாபாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...