முறையான சிகிச்சை இல்லாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை குற்றச்சாட்டு - கோவை அரசு மருத்துவமனை விளக்கம்!

உயிரிழந்த ராஜேஷ்குமாருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும், வியாதிகளால் தான் அவர் இறந்தார் சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை எனவும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா விளக்கம் அளித்துள்ளார்.



கோவை: உயிரிழந்த ராஜேஷ்குமாருக்கு அக்கறையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு வியாதிகள் தான் காரணம், சிகிச்சையில் எந்த தவறும் இல்லை என மருத்துவமனை டீன் விளக்கமளித்துள்ளார்.

தாராபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் - காளியம்மாள் தம்பதியினரின் மகன் ராஜேஷ் குமார்(38), கோவை அரசு மருத்துவமனையில் கடந்த புதன்கிழமையன்று டயாலிசிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார்.



இந்நிலையில் அவரது உயிரிழப்புக்கு அரசு மருத்துவமனையே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு மருத்துவமனையில் மருந்துகளை மருத்துவர்கள் வெளியில் வாங்க சொன்னதாகவும், லஞ்சம் கேட்பதாகவும், செவிலியர்கள் முறையாக நோயாளிகளை கவனித்து கொள்வதில்லை எனவும் ராஜேஷ்குமாரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,



ராஜேஷ்குமார் கிட்னியின் செயல்திறன் மோசமாக தான் இருந்தது. திசுக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தது.

மேலும் அவருக்கு நீண்ட நாட்களாகவே பாதிப்பு இருந்ததால் அவருக்கு நீண்ட கால டயாலிசிஸ் தேவைப்படும் நிலை இருந்தது. ஏற்கனவே 8 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஐந்தாம் தேதி தான் முதலில் சிகிச்சைக்கு அவர் வந்தார்.

அவருக்கு ஜெனடிக் பரிசோதனை செய்தபோது ஜீன்கள் மோசமாக இருந்தது. இந்த பரிசோதனை செய்ய அதிக செலவு ஆகும் என்பதால் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தது. இங்கு அவருக்கு அதிக அக்கறையுடன் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. வியாதிகளால் தான் அவர் இறந்தார் சிகிச்சை முறையில் எந்த தவறும் இல்லை.



இங்கு மருந்துகளை வெளியில் வாங்க கூறுவது இல்லை. லஞ்சம் யார் கேட்டது என கூறினால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் என்பது நடைமுறையில் இருப்பது தான். மருந்து தட்டுப்பாடு ஏதேனும் இருந்தால் துறை தலைவர்கள் தரப்பில் உரிய தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜேஷ்க்கு குணப்படுத்தும் வகையிலான நோய் இல்லை. 50 வயதிற்கு மேல் வரும் நோய் 35 வயதிலேயே அவருக்கு வந்து விட்டது. மேலும் அவருக்கு இணை நோய்கள் இருந்தது.

கோவை அரசு மருத்துவமனையில் எமர்ஜென்சி என்றால் உடனடியாக எடுக்கப்படுகிறது. Elective cases என்றால் வேறு நாட்கள் குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் பொதுவான ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...