நல்லாயன் துவக்க பள்ளியில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதவியேற்பு!

கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதவியேற்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.


கோவை: கோட்டைமேடு நல்லாயன் துவக்க பள்ளியில் மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

கோவை கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லாயன் துவக்க பள்ளியில் கடந்த 17ஆம் தேதி மாணவர் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி பள்ளியின் மாணவர் தலைவராக சஜ்ஜாத் முஜாஹித், துணை தலைவராக ஹிமாம் அஸ்லம், உணவு தலைவராக ஜெரோம் ரையான், விளையாட்டு தலைவராக இம்ரான், சுற்றுச்சூழல் தலைவராக முகமது பாரிஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் புனித மைக்கேல் அதிதூதர் பேராலய அதிபர் ஜார்ஜ் தனசேகர், மற்றும் நல்லாயன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஹென்றி டேனியல் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பினை செவ்வனே மேற்கொள்வோம் என சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...