திருப்பூர் மாவட்டத்தில் காவலர்கள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் - மாவட்ட எஸ்.பி சாமிநாதன் உறுதி!

பல்லடம் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் என்றும், கிராமபுறங்களில் சிசிடிவி பயன்பாடு குறித்து அறிவுரை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில், புறகாவல் நிலையங்கள் அமைக்கவும் பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்த நிலையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் புறகாவல் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.



இங்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த திருப்பூரை சேர்ந்த அன்னை எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் 65 ஆயிரம் நிதி உதவி வழங்கியது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு புறகாவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,



இந்த பல்லடம் புறகாவல் நிலையத்தில் 40 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கிராமப்புறங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காவலர்கள் பற்றாக்குறையை குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு விரைவில் காவலர்கள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் என பதிலளித்தார்.



இந்நிகழ்ச்சியில் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...