தாராபுரத்தில் நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு - நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதம்!

தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் நகராட்சி பள்ளி வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள சாலையோர கடைகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கடைக்காரர்கள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடைக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் நகராட்சி பள்ளி வளாகம் முன்பு சாலையோர கடைகள் வைத்துள்ள நபர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்ற வேண்டும் என தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாராபுரம் கோட்டாட்சியர், நெடுஞ்சாலை துறை, நகராட்சி ஆணையாளரிடம் கடந்த ஆறு மாத காலமாக புகார் மனு கொடுத்து வந்தனர்.

அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை மூலம் பொள்ளாச்சி சாலை நகராட்சி மேல்நிலைப்பள்ளி அருகே நடைபாதை கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் வாகனங்களுடன் வருகை தந்தனர்.



அப்போது தள்ளு வண்டி கடைக்காரர்கள் மற்றும் சாலையோர கடைக்காரர்களுக்கு ஒன்றிணைந்து சாலையோர கடைகளை காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



அதனை தொடர்ந்து தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



அப்போது பொதுமக்கள் பாரம்பரியமாக அதே பகுதியில் கடை நடத்தி வருவதாகவும் தள்ளுவண்டி கடைகளை நம்பி தனியார் வங்கிகளில் கடன் வாங்கி உள்ளதாகவும் திடீரென கடைகளை எடுக்க கூறினால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதுடன் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என முறையிட்டனர்.



அதன் பிறகு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சந்தா தொகையினை நகராட்சி நிர்வாகத்திற்கு முறையாக செலுத்துகிறோம். நகராட்சி நிர்வாகத்தினர் கணக்கெடுத்து எங்களுடைய தொகையை பெற்றுக் கொண்டு எங்களுக்கு தொடர்ந்து இப்பகுதியில் கடை நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என முறையிட்டனர்.

இதனை தொடர்ந்து நகர் மன்ற தலைவர் நடைபாதை கடைக்காரரிடம் தெரிவித்ததாவது, வரும் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் உடன் பேசி நல்ல முடிவு எடுத்து தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதன் பிறகு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடையை காலி செய்வது குறித்தும் சுங்க வசூல் செய்வது குறித்தும் சில நாட்களில் ஆலோசனை நடத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து தற்காலிகமாக சாலையோர கடைகள் அகற்றும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...