தாராபுரத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது!

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் பகுதியில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தவரிடம் செல்போனை திருடிச் சென்ற தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த தமிழரசன்(22), சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த கோபிநாத்(23) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செல்போன் திருடிய வழக்கில் 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் அடுத்த பச்சாம்பாளையம் அருகேயுள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் தேவேந்திரன்(30). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வந்த பின், வீட்டுக்கு வெளியே தூங்கி உள்ளார்.

அப்போது, அங்கு வந்த சிலர் தேவேந்திரனின் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அதில், தேவேந்திரனின் செல்போனை தாராபுரம் சர்க்கரை மில் பகுதியைச் சேர்ந்த பாலன் மகன் தமிழரசன்(22), குப்புசாமி மகன் சூர்யா பிரகாஷ்(20), ஹனுமந்தபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்(23) ஆகிய மூவரும் சேர்ந்து திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...