கோவையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் அளித்த மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட்டுதல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவு நீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கொப்பரை கொள்முதல் தேதியை நீட்டிக்க செய்யவும், நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பு சரி செய்யவும், நொய்யல் ஆற்றில் கழிவு மற்றும் மாசு கலப்பதை தடுக்கவும் காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் ஓய்வூதியம் வழங்கிடவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...