சட்டக் கல்லூரியில் திருநங்கைகளுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் - கோவையில் திருநங்கை பிரனிஷ்கா கோரிக்கை!

கோவை தித்திப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரனிஷ்கா என்ற திருநங்கை சட்டக்கல்லூரில் படிக்க விண்ணப்பித்திருந்த நிலையில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக கூறிய அவர் சட்டக் கல்லூரியில் திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.



கோவை: சட்டக் கல்லூரிகளில் திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த திருநங்கை பிரனிஷ்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை தித்திப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ன முனியாண்டி, சரஸ்வதி தம்பதியினரின் மகளான திருநங்கை பிரனிஷ்கா. இவர், தித்திப்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார்.



இவருக்கு சட்டம் படிக்க விருப்பம். இதையடுத்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் சட்டம் படிக்க வேண்டி விண்ணப்பித்தார்.

ஆனால், அவருக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. தனது மனுவை நிராகரிக்கப்பட்டதாக கருதிய நிலையில், கோவைக்கு வந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரனிடம் மனு வழங்கினார்.

இது குறித்து பிரனிஷ்கா கூறியதாவது,



திருநங்கைகள் பல்வேறு துறையில் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டி விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. என் விண்ணப்பித்தை நிராகரித்து விட்டதாக நினைக்கிறேன்.

இதனால், எனக்கு சட்டம் படிக்க உதவி செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கு தனியாக சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் மனு அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...