ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!

ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்கி வரும் ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப்பின் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.



கோவை: ரோட்டரி கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி கிளப் 2023-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ உதவி தொகை வழங்குவது, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், இலவச மருத்துவ முகாம்கள் என பல்வேறு சமூகம் நலம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி 2023-24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கோவை ரத்னா ரெசிடென்சி ஒட்டல் அரங்கில் நடைபெற்றது.



சார்ட்டர் பிரசிடெண்ட் மூத்த வழக்கறிஞர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சார்ட்டர் செக்ரட்டரி ராஜசேகர் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக எமரால்டு ஜூவல் குழும நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், எதிர்கால மாவட்ட ஆளுநர் மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் புதிய தலைவராக சரவணன்,செயலாளராக ஜெயராம், மற்றும் நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நீரிழிவு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

இதே போல ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு ரூபாய் அறுபதாயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், தீத்தீபாளையம் அரசு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கான புத்தகங்கள் மற்றும் அலமாரி, வழங்கப்பட்டது.



தொடர்ந்து ரோட்டரி கிளப் கோயமுத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் இண்டஸ் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் நிர்வாகிகள் கனகராஜ், முகமது சபியுல்லா மற்றும் உப தலைவர் உமா பிரபு, பிரபுராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...