நிலத்தை அபகரித்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா!

கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்று அபகரித்து கொண்டதாக கூறி, கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.


கோவை: தனது நிலத்தை அபகரித்து விட்டதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயியான இவர், கொண்டையாம்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எல்ஜிபி என்ற தனியார் நிறுவனம் மோசடி செய்து அபகரித்து விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவரை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்க அழைத்து சென்றனர்.

இது குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது, இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, தனது நிலம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படி அறிவித்த நிலையில், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயி ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...