திருப்பூரில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம் - ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு!

திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான முதல்கட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் துவங்கி வைத்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூரில் மகளிர் உரிமை திட்டம் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமினை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

இந்த திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக இன்று 225 ஊராட்சிகள் 13 ஊராட்சி ஒன்றியங்கள் 30 மாநகராட்சி வார்டுகளில் நடைபெற்றது. இந்த விண்ணப்ப பதிவு முகாமை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தார்.



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் விண்ணப்ப பதிவு முகாம்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



விண்ணப்ப பதிவு முகாமில் கலந்து கொள்ளும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அவர்களது இல்லங்களுக்கு கொண்டு சென்று விண்ணப்பங்கள் மற்றும் கலந்து கொள்ள வேண்டிய தேதி நேரம் ஆகியவை குறிப்பிட்ட டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...