அண்ணாமலையின் யாத்திரை பொய்யான யாத்திரை - முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள ‘என் மண் என் மக்கள்’ என்ற மக்கள் சந்திப்பு யாத்திரை ஒரு பொய்யான யாத்திரை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்.



கோவை: பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற யாத்திரை ஒரு பொய்யான யாத்திரை என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் விமர்சித்துள்ளார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாணவர் அமைப்பு சார்பில் தமிழ்நாடு மாணவர் அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் கலந்து கொண்டு மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.



மாணவர் அமைப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகாந்த் பேசியதாவது,



மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் அதற்கு உரிமை உண்டு. ஆனால் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள யாத்திரையானது ஒரு பொய்யான யாத்திரை அதனால் எந்த பயனும் இருக்காது. அதில் மேற்காட்டுவது அதிகமாக இருக்கும் ஆனால் அதில் எந்தவிதமான பயனும் இருக்காது,

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பெரிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது. கருத்து உடைய கூட்டு இயக்கமாக செயல்பட உள்ள நிலையில் அது வரவேற்க கூடியதாக இருக்கும். கர்நாடகத்தை போன்று தமிழக அரசியலிலும் சிலிண்டரை வைத்து அரசியல் செய்தது போல தமிழகத்திலும் அரசியல் செய்ய உள்ளோம்.

சிலிண்டர் என்பது பாஜக அரசுக்கு எதிரான சின்னம் அது எல்லா மக்களுக்கும் சாத்தியமாக அமையும். 2024 ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தல் என்பது பிஜேபிக்கும் காங்கிரஸ்க்கும் இடையேயான தேர்தல் இல்லை. இது அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக நின்று பிஜேபியை எதிர்ப்பதற்கான தேர்தல்.

மணிப்பூர் விவகாரம் மக்களை இரண்டாக பிரித்து நடைபெற கூடிய வன்முறை, மாநில அரசாங்கங்களை அடக்கு முறையால் அடக்கி விடலாம் என்று மத்திய அரசு வைத்துள்ள அனைத்து துறைகளையும் மத்திய அரசுக்கு கீழ் உள்ள அரசாங்கங்களுக்கு எதிராக திருப்பு முயற்சி மத்திய அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...