உடுமலையில் 72 வயது மூதாட்டிக்கு தொடை எலும்பு மாற்று சிகிச்சை - மருத்துவர்கள் சாதனை!

கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்டு வந்த உடுமலையை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கு மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டி நடைபயிற்சி மேற்கொண்டு வருவதாக மருத்துவர்கள் தகவல்.



திருப்பூர்: உடுமலை அருகே 72 வயது மூதாட்டிக்கு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 72 வயது . மூதாட்டி கன்ரோஸ் சார்கோமா என்ற ஒரு வகை எலும்பு புற்று நோயினால் சில வருடங்கள் பாதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகளில் கீமோ தெரபி சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டார்.



அப்போது கோவை மருத்துவர்கள் கால் எடுக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து உடுமலையில் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜை சந்தித்து அவருடைய மருத்துவ ஆலோசனை படி மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, மருத்துவர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



இதுபோன்ற கடினமான அறுவை சிகிச்சைகள் சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் உடுமலை மோகன்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை மருத்துவர் குழு, தலைமை மருத்துவர் டாக்டர் எம்.எஸ்.மோகன்ராஜ் தலைமையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மூதாட்டி நடை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...